Home Featured கலையுலகம் லஷ்மியின் விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்!

லஷ்மியின் விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்!

894
0
SHARE
Ad

lakshmi-ramakrishnan45சென்னை – பிரபல தொலைக்காட்சி ஒன்றில், நடிகை லஷ்மி இராமகிருஷ்ணன் நடத்தி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கிண்டல் செய்யும் விதமாக, ஜி.வி.பிரகாஷ் நடித்து அண்மையில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தில் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அக்காட்சியில் நடிகை ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே பாலாஜி, எம்.எஸ்.பாஸ்கர், ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அத்திரைப்படத்தைப் பார்த்த நடிகை லஷ்மி இராமகிருஷ்ணன், ஜி.வி.பிரகாசையும், ஆர்.ஜே.பாலாஜியையும் கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

kik1ஜி.வி.பிரகாஷ் இது போன்ற படங்களில் நடிப்பதை விடுத்து, தான் இயக்கும் படத்தில் நடிக்க வந்தால், நிச்சயமாக பிறர் மரியாதையளிக்கும் வகையில் நல்ல கதாப்பாத்திரத்தை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ஜி.வி.பிரகாஷ், லஷ்மி இராமகிருஷ்ணன் சொல்லும் கதை தனக்குப் பிடித்திருந்தால், நடிக்கத் தயார் என்று தெரிவித்திருப்பதோடு, இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதோடு, காக்கா முட்டை, பரதேசி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் தான் பணியாற்றியிருப்பதையும் ஜி.வி.பிரகாஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.