Home Featured நாடு இன்பா சுப்ரமணியனின் ‘வையாசி 19’ நூல் அறிமுக விழா!

இன்பா சுப்ரமணியனின் ‘வையாசி 19’ நூல் அறிமுக விழா!

891
0
SHARE
Ad

inbaகோலாலம்பூர் – தமிழக எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனின் ‘வையாசி 19’ என்ற நாவல் இன்று நவம்பர் 24-ம் தேதி, வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், மஇகா தேசியத் தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் அறிமுகமாகவுள்ளது.

தமிழ் மொழி, பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், ‘வையாசி 19’ என்ற நாவலின் கருப்பொருள் அமைந்துள்ளதாக இன்பா தெரிவித்துள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு, மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமை வகிக்க, மலேசியாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா நூலாய்வு செய்கிறார்.

அதோடு, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன், பிரதமர் துறையைச் சேர்ந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் எதிர்கால திட்ட வரைவு ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.இராஜேந்திரன், இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கச் செயலாளரும், நடிகருமான இளவரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.