கோலாலம்பூர் – மலேசிய இந்தியப் பாரம்பரிய நடனம் மற்றும் இசை சங்கத்தில் அங்கம் வகிப்பதோடு, தேசிய பதிவும் பெற்றுள்ள நந்திகேஸ்வரர் நுண் கலாலயம், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தலைமையில், நாளை நவம்பர் 27-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணியளவில், விஸ்மா துன் சம்பந்தனிலுள்ள, டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கத்தில் அறிமுகமாகவுள்ளது.
நந்திகேஸ்வரர் நுண் கலாலயம் குறித்து அதன் நிர்வாகி குருஸ்ரீ சந்திரமோகன் இராமசாமி கூறுகையில், “நமது நந்திகேஸ்வரர் நுன் கலாலயம் தேசிய பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தனி மனிதனான எனக்கு மட்டும் சார்ந்தது அல்ல. இதன் மூலம், பல மாணவர்கள், ஒற்றையாக இருக்கும் தாய்மார்கள், நலிந்த கலைஞர்கள், வயோதிகத்தில் வருமானமின்றி கஷ்டப்படும் குருமார்கள் எனப் பலர் பயன் பெறும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது.” என்று குருஸ்ரீ சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், நடனம் மற்றும் இசைத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த அறிமுக விழாவில் கலந்து கொள்ளும்படியும், நந்திகேஸ்வரர் நுண் கலாலயத்துடன் இணைந்து பயனடையும் படியும் குருஸ்ரீ சந்திரமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.