Home நாடு கேமரன் மலை: கேவியஸ் போட்டியிடுவது ஞாயிற்றுக்கிழமை முடிவு!

கேமரன் மலை: கேவியஸ் போட்டியிடுவது ஞாயிற்றுக்கிழமை முடிவு!

868
0
SHARE
Ad

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில் மைபிபிபி கட்சி களம் இறங்குமா என்பதை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என்று மலேசியா கினி இணையச் செய்தித் தளம் குறிப்பிட்டிருக்கிறது.

நாளை மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 14-வது பொதுத் தேர்தலில் பலத்தப் பின்னடையை அடைந்த மைபிபிபி கட்சி, தேசிய முன்னணிக் கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என கேவியஸ் கூறியிருந்தார் .

#TamilSchoolmychoice

பாஸ் மற்றும் பிஎஸ்எம் கட்சிகள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்துவிட்ட நிலையில், பாஸ் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறியிருந்தது.

இதற்கிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை), பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம்மனோகரனை, நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் அறிவித்தார்.

14- வது பொதுத் தேர்தலில்தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் சிசிவராஜ், 1954 தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் எனகடந்த ஆண்டுஜூன் 4-ஆம் தேதி மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்அதனைத் தொடர்ந்து தேர்தல் நீதிமன்றம்கேமரன் மலையில் சிவராஜின் வெற்றியை இரத்து செய்துஅத்தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டது.