Home இந்தியா சபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்!- கமல்ஹாசன்

சபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்!- கமல்ஹாசன்

905
0
SHARE
Ad

சென்னை: சபரிமலை கோயில் குறித்த வன்முறை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலது சாரி இயக்கங்களே முக்கியக் காரணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் வியாழக்கிழமை கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் தேர்தலுக்காக வெளிப்படையாக கூட்டு அமைப்பதற்கு பிரதமர் மோடி மனம் திறந்து வெளியிட்ட கருத்திற்குப் பிறகு கமல்ஹாசன் இந்த கூற்றினை வெளியிட்டிருக்கிறார்.

50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது இந்து பாரம்பரியவாதிகள் மற்றும் ஆர்வலர்களும், காவல் துறையினரோடு மோதலில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து, பல்வேறு   பகுதிகளில்  கடைகள் மற்றும் சந்தைகளை மூடினர். இந்தப் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் பி.ஜே.பி தொண்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.