Home நாடு மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்!

மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்!

1065
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது.

இந்தப் புதிய ஆணை கடந்த ஜனவரி 2—ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. முதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்திய மலேசியர்களுக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக மாற்றம் செய்பவர்களுக்கு 700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கிடையில், 12 வயதிற்கும் குறைவான குழந்தைகள், 21 வயதிற்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்தினால் 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக விண்ணப்பிப்பவருக்கு 600 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

மூன்றாவது முறையாக தங்கள் கடப்பிதழ்கள் தொலைந்து அல்லது சேதமடைந்திருந்தால் 1,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும், 12 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும், 21 வயதுக்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு 1,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, குடிநுழைவு துறை, தங்கள் பயண ஆவணத்தைத் தொலைத்த அல்லது சேதப்படுத்தியதற்காக , மலேசியர்களுக்கு எவ்வித அபராதமும் விதித்ததில்லை.