Home நாடு கேமரன் மலை: கேவியசும் போட்டியில் குதிக்கிறார்

கேமரன் மலை: கேவியசும் போட்டியில் குதிக்கிறார்

1240
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னர் செல்லியல் ஊடகத்தில் வெளியிட்டிருந்த ஆரூடங்களுக்கு ஏற்ப மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியசும் கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மைபிபிபி கட்சியின் இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் அவர் கேமரன் மலையில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இடைத் தேர்தலில் மேலும் பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் தான் போட்டியிட முன்வந்திருப்பதாக கேவியஸ் இன்று கூறினார்.

தங்கள் வசம் ஏற்கனவே 3 ஆயிரம் வாக்குகள் இருப்பதாலும், தற்போது நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி என இரண்டு கூட்டணிகளுடனும் தாங்கள் இணைந்து இருக்கவில்லை என்பதாலும் மைபிபிபி சார்பாக தான் போட்டியிட முன்வந்திருப்பதாக கேவியஸ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதுவரையில் வெளிவந்த அறிவிப்புகளின்படி, சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாத பட்சத்தில் கேமரன் மலை இடைத் தேர்தல் மும்முனைப் போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தேசிய முன்னணியிலிருந்து நாங்கள் விலக வேண்டிய கட்டத்தில் நாங்கள் பல சிரமமான சூழ்நிலையை எதிர்நோக்கினோம். எங்களுக்கு அழுத்தமும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இப்போது நாங்கள் எங்களின் சொந்தக் கால்களில் நின்று சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறோம். எங்கள் வசம் 3 ஆயிரம் வாக்குகள் இருந்தாலும், எஞ்சிய வாக்குகளைப் பெற நாங்கள் பாடுபட வேண்டும். கட்சியின் உறுப்பினர்களின் உண்மையான பலம் இன்னும சரியாகத் தெரியாத காரணத்தால், நாங்கள் நன்கொடைகளின் மூலம் இந்த இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றும் கேவியஸ் தெரிவித்தார்.