Home Featured நாடு நிலச்சரிவு: தாமான் இடாமான் 340 குடியிருப்பாளர்களும் வெளியேற்றம்!

நிலச்சரிவு: தாமான் இடாமான் 340 குடியிருப்பாளர்களும் வெளியேற்றம்!

745
0
SHARE
Ad

serendah-landslide

செரண்டா – இன்று சனிக்கிழமை அதிகாலை செரண்டா தாமான் இடாமான் பகுதியில் நிகழ்ந்த நிலச் சரிவைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் 340 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உலு சிலாங்கூர் வட்டார காவல் துறைத் தலைவர் ஆர்.சுப்ரமணியம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

பொதுப்பணித் துறை இலாகாவின் தொழில்நுட்பக் குழு இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களையும், அதனால் ஏற்பட்டுள்ள பண ரீதியான இழப்புகளையும் ஆராய்ந்து வருகின்றது என்றும் ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளோட்டி நிலச் சரிவில் காயமடைந்ததோடு, 10 வாகனங்களும் இந்த நிலச் சரிவில் புதையுண்டன.

இதற்கிடையில் இந்த நிலச் சரிவுக்கான காரணம், நிலத்தின் அடியில் நிகழ்ந்த நீரோட்டம்தான் காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன.