இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், படுக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
#TamilSchoolmychoice
மேலும், சுமார் 5 மில்லியன் ரிங்கிட் செலவில், சாலைகளும், வீடுகளும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதனிடையே, டிசம்பர் மாத இறுதியில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்குவதற்கு ஏற்றது என்று பல சோதனைகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியதையடுத்து, தற்காலிக தங்குமிடங்களில் இருந்த மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.
தற்போது தாமான் இடாமன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதோடு, புதிய சாலையில் மக்கள் வழக்கமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.