Home Featured தமிழ் நாடு முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி காலமானார்!

முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி காலமானார்!

749
0
SHARE
Ad

mani-ko-si-deceased-former-dmk-minister

சென்னை – திமுகவின் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி (படம்) நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) இரவு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.

இவர் பல தவணைகள் ஆடுதுறை, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிகளின் வழி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் கோ.சி.மணி இருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும், திமுக ஆட்சிக் காலத்தின்போது 3 முறை அமைச்சராக இருந்தார். வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் அமைச்சர் பதவியில் இருந்தவர்.

திமுக தலைவர் கருணாநிதியின் நெருக்கமான அரசியல் சகாக்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மணி. கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மேக்கிரிமங்கலத்தில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.