Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘சென்னை 28 – II’ – இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி!

திரைவிமர்சனம்: ‘சென்னை 28 – II’ – இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி!

666
0
SHARE
Ad

mainகோலாலம்பூர் – பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‘சென்னை 600028’ திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அத்தனை பேரையும் மீண்டும் ஒன்று திரட்டுவதே ஒரு மிகப் பெரிய சவாலான வேலை தான்.

அதை மிக அழகாகச் செய்திருப்பதோடு, அந்நடிகர்களின் தற்போதைய தோற்றம், வயது, சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் கதையையும், திரைக்கதையையும் அதற்கு ஏற்ப இயல்பாக அமைத்து, படத்தின் சுவாரசியம் குன்றாமல் சிறப்பாக இயக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

படத்தின் துவக்கத்தில் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவரையாக வெங்கட் பிரபு அறிமுகம் செய்யும் போதே, படம் பார்க்கிறோம் என்பதை மறந்து ‘ஷார்க்ஸ் டீம்’ ப்ளேயர்சின் தற்போதைய வாழ்க்கைக்குள் நாமும் நுழைந்து விடுகின்றோம். அவ்வளவு அழகான குழப்பமில்லாத தெளிவான அறிமுகம்.

#TamilSchoolmychoice

அதோடு, தற்போதைய கேஜட்ஸ் (Gadgets) காலத்தில், இளைஞர்களிடையே கிரிக்கெட்டின் மீது முன்பு இருந்த ஆர்வம் இல்லை என்பதையும் உணர்ந்துள்ள வெங்கட்பிரபு, முற்றிலும் கிரிக்கெட்டை மட்டுமே மையமாக வைக்காமல், கதையில், காதல், கல்யாணம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தை குட்டி என்று பல சுவாரசியமான சம்பவங்களையும் இணைத்திருக்கிறார்.

ராஜேஸ் யாதவின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும் அதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பிரவீனின் படத்தொகுப்பு தேவையான இடங்களில் அழகாக கத்தரி போட்டு காட்சிகளை இணைத்திருக்கிறது.

கதை என்ன?

chennai-600028-2-siva-picturesஷார்க்ஸ் டீமில் இருந்த பலர் கல்யாணம், குழந்தை குட்டி என்று செட்டில் ஆகி விடுகிறார்கள். பிரேம்ஜி மட்டும் கல்யாணம் ஆகாமல் ஒண்டிக் கட்டையாகவே அலைகிறார். இவர்கள் அனைவரும் தேனியில் நடக்கவிருக்கும் ஜெய் – சானா அல்தாஃப் திருமணத்தில் ஒன்று கூடுகிறார்கள்.

அந்த ஊரில் ரௌடியான வைபவ், கிரிக்கெட் டீம் ஒன்றை வைத்துக் கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து தொடர்ந்து வெற்றியடைந்து வருகின்றார்.

அந்த அணியுடன் ஷார்க்ஸ் டீம் மோதுகின்றது. அதில் வைபவ் அணி தோல்வியடைகின்றது. இதனால் ஆத்திரமடையும் வைபவ், சதி வேலை செய்து ஜெய் திருமணத்தை நிறுத்துகிறார். இதனால் இரு குடும்பத்திற்குமிடையே மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.

ஜெய் அப்பிரச்சினையில் இருந்து மீண்டாரா? அவரது திருமணம் நடந்ததா? ஷார்க்ஸ் அணி கிரிக்கெட்டில் வென்றதா? என்பது படத்தின் சுவாரசியம்.

காமெடி

chennai28_2ndinnings_4படம் முழுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அதிலும் மிர்ச்சி சிவா யூடியூப் விமர்சகராக அடிக்கும் லூட்டிகள் கலகலப்பு. அதே வேளையில், சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ் ஆகிய நால்வரும் தங்களது மனைவிகளான விஜயலஷ்மி, ஷாந்தினி, அஞ்சனா, மகேஸ்வரி ஆகியோரிடம் சிக்கிக் கொண்டு படும் பாடு வாய்விட்டு சிரிக்கலாம்.

வழக்கம் போல் பிரேம்ஜி தனது பங்கிற்கு தனது பாணியில் கலகலப்பு சேர்த்திருக்கிறார். அவரோடு இளவரசும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதிலும், முதல் பாகத்தில் வந்த ‘பேட் பாய்ஸ்’ சிறுவர் அணி, இந்தப் பாகத்தில் ஐஎஸ்எல் பிளேயர்சாக மீசை தாடியுடன் களமிறங்குவது மிகவும் ரசிக்க வைக்கின்றது. விஜய் வசந்த் தனது ராசியான பேட்டை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றரா? என்பதும் ரசனை.

அதோடு, ‘பிரியாணி’ டுவிஸ்ட் போல் இதிலும் ஒரு கவர்ச்சிப் பாடலுக்குப் பின் டுவிஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குநர்.

குறைகள்

chennaiதொடக்கத்தில் இருந்து ஜாலியாக செல்லும் படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஜெய்க்கும், சானாவுக்கும் இடையிலான காதலில் ஒரு ஈர்ப்பு இல்லை. முதல் பாகத்தை எடுத்துக் கொண்டால், சிவா – விஜயலஷ்மி காதல் அவ்வளவு அழகாக இருக்கும். அது இப்படத்தில் இல்லை.

“யாரோ” பாடலைப் போல் கேட்டவுடன் சட்டென மனதில் ஒட்டிக் கொள்ளும் பாடலும் இல்லை. ஆனால் அதை பின்னணி இசையில் சரிக் கட்டியிருக்கிறார் யுவன்.

பேத்தியின் காதலை சேர்த்து வைக்க பாட்டி சச்சு போடும் வியூகங்கள், மனோரமா காலத்தில் இருந்து பார்த்து வரும் பழைய டெக்னிக் பாஸ். காலத்துக்கு ஏற்ப அதையும் கொஞ்சம் மாத்தியிருக்கலாமே.

chennai-600028-part-2-hd-still-2வைபவ் கதாப்பாத்திரம் ஓகே.. தேனிக்காரர்களின் பேச்சு வழக்கும் ஓகே.. ஆனாலும் அந்தக் கதாப்பாத்திரத்தோடு ஒட்ட முடியவில்லை. நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் – ‘சென்னை 600028 – 2’ – இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி! 

– ஃபீனிக்ஸ்தாசன்