Home Featured நாடு 1 மாதத்திற்கு எம்ஆர்டி சேவை இலவசம் – நஜிப் அறிவிப்பு!

1 மாதத்திற்கு எம்ஆர்டி சேவை இலவசம் – நஜிப் அறிவிப்பு!

1038
0
SHARE
Ad

mrt1கோலாலம்பூர் – நாளை டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படவுள்ள சுங்கை பூலோ – காஜாங் இடையிலான எம்ஆர்டி இரயில் சேவையும், இணைப்புப் பேருந்துகளும் வரும் ஜனவரி 31-ம் தேதி வரையில் இலவசமாக இயக்கப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

இன்று மதியம் எம்ஆர்டி வாசா டாமன்சாராவில், சுங்கை பூலோ – காஜாங் இடையிலான எம்ஆர்டி இரயில் சேவையை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய நஜிப், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய, நவீன, செயல்திறன் மிக்க பொதுப்போக்குவரத்து வசதியை, 1 மாதம் இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பினை பொதுமக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அரசாங்கம் வழங்குவதாக நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice