Home Featured தமிழ் நாடு ராகுல் காந்தியைத் தொடர்ந்து அதிமுகவின் தம்பிதுரை, ஜெயகுமார் கருணாநிதியை நலம் விசாரித்தனர்!

ராகுல் காந்தியைத் தொடர்ந்து அதிமுகவின் தம்பிதுரை, ஜெயகுமார் கருணாநிதியை நலம் விசாரித்தனர்!

739
0
SHARE
Ad

rahul_gandhi

சென்னை – இங்குள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை இன்று சனிக்கிழமை நண்பகலில் புதுடில்லியிலிருந்து சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1.15 மணியளவில் (இந்திய நேரம்)  அதிமுகவைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரையும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரும்  காவேரி மருத்துவமனை வந்தடைந்தனர்.

#TamilSchoolmychoice

அங்கு அவர்கள் இருவரும் மு.க.ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது மு.க.ஸ்டாலினும் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்து அதிமுக தலைவர்களுக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.