Home Featured நாடு அடுத்த பிரதமராக வான் அசிசா – லிம் கிட் சியாங் முன்மொழிந்தார்!

அடுத்த பிரதமராக வான் அசிசா – லிம் கிட் சியாங் முன்மொழிந்தார்!

768
0
SHARE
Ad

Wan-Azizah

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த பிரதமர் யார் என எழுந்திருக்கும் சர்ச்சைக்கான தீர்வாக, ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் இடைக்காலப் பிரதமராக பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசாவை முன்மொழிந்துள்ளார்.

நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது லிம் கிட் சியாங் இந்த தீர்வை முன்மொழிந்துள்ளார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் இடைக்காலப் பிரதமராக வான் அசிசா பதவியேற்க வேண்டும் என்றும், இடைக்காலத் துணைப் பிரதமராக பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் பதவியேற்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

Lim Kit Siangஇதற்கிடையில் 1 எம்டிபி விவகாரத்தில் மிகப் பெரிய ஏமாற்று வேலையையும், மூடி மறைக்கும் வேலையையும் அம்னோ பொதுப் பேரவையும், நாடாளுமன்றமும் செய்துள்ளதாகவும் லிம் கிட் சியாங் இன்று வெளியிட்ட அறிக்கையில் சாடினார்.

அதே அறிக்கையில் மலேசியாவின் முதல் நான்கு பிரதமர்களையும் லிம் கிட் சியாங் பாராட்டியுள்ளார். அவர்கள் இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் கூறியுள்ள லிம், முன்னாள் பிரதமர் துன் மகாதீரையும் பாராட்டியுள்ளார்.

கிட் சியாங் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவிக்க அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த துன் மகாதீர் முகமட் காரணமாக அமைந்தார்.

சிறைத் தண்டனை பெற்றாலும், பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்னும் அன்வார் இப்ராகிம்தான் என்றும் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.