Home Featured இந்தியா வாஜ்பாய் 92-வது பிறந்த நாளுக்கு மோடி நேரில் வாழ்த்து!

வாஜ்பாய் 92-வது பிறந்த நாளுக்கு மோடி நேரில் வாழ்த்து!

794
0
SHARE
Ad

புதுடில்லி – முன்னாள் பாஜக தலைவரும், இந்தியப் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25 டிசம்பர்) தனது 92 வயது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலம் குன்றிய நிலையில் வெளியில் எங்கும் செல்லாமல் தன் வீட்டிலேயே இருந்து வரும் வாஜ்பாயைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்திற்கு நேற்று நேரில் சென்றார்.

narendra-modi-vajpayee-house-birthdayவாஜ்பாய் இல்லத்தில் அவரது குடும்பத்தினருடன் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா…

தனது டுவிட்டர் தளத்திலும் வாஜ்பாயிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி, “அடல்ஜியின் முன்னுதாரண சேவையும், தலைமைத்துவ ஆற்றலும் இந்தியாவின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது. அவரது  ஆளுமை மிகப் பெரியது” என்று தெரிவித்துள்ளார்.