புதுடில்லி – உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் புதிய திருப்பங்கள் இன்று ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான சமஜ்வாடி கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்த தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்வால் நீக்கப்பட்ட முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மற்றும் முலாயம் சிங்கின் சகோதரர் ராம்கோபால் யாதவ் இருவரும் பின்னர் நேற்று மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டும் அதுவுமாக கூடிய சமஜ்வாடி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு அதிரடியாக புதிய கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ்வை நியமித்தது. அந்தப் பதவியை முலாயம் சிங் யாதவ் பல ஆண்டுகளாக வகித்து வந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சகோதரர் ராம்கோபால் யாதவ்வை முலாயம் சிங் மீண்டும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அகிலேஷின் தேர்வு சட்டபூர்வமானதல்ல என்றும் முலாயம் அறிவித்துள்ளார்.
தனது தந்தை மீதிலான மரியாதை நடந்து வரும் அரசியல் சம்பவங்களால் எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை என்றும் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.