Home Featured இந்தியா பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்!

பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்!

776
0
SHARE
Ad

bangaloreபெங்களூர் – கடந்த சனிக்கிழமை இரவு, பெங்களூர் எம்ஜி ரோடு பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர், சில ஆண்களால் மிக மோசமான வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் அந்நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 31-ம் தேதி இரவு, பெங்களூர் எம்ஜி ரோடு பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டம் களை கட்டும். ஆண்களும், பெண்களும் அப்பகுதி முழுவதும் நிறைந்து ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள்.

அதே போல், கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு நடந்த புத்தாண்டுக் கொண்ட்டாட்டத்தின் போது, கூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், கூட்ட நெரிசலில் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை செய்யத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களோடு வந்திருந்தாலும் கூட, கூட்டத்தில் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து தப்பிக்க பெண்கள் பலர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் முறையிடத் தொடங்கினர்.

அதனையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், பல பெண்கள் அழுது கொண்டே உதவி கேட்டு கத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், “பெண் ஒருவரின் உடம்பில் கீறல்கள் இருந்தது. அதிலிருந்து இரத்தம் கசிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இது போன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கை தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரங்களைப் பின்பற்றுவது தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது கருத்து தற்போது கர்நாடக மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் கடந்த 2016 புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது 150 பெண்களுக்கும் மேல் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.