Home Featured தமிழ் நாடு ‘இன்னோவா சம்பத்’ என்ற பழி எதற்கு? – காரைத் திரும்ப ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!

‘இன்னோவா சம்பத்’ என்ற பழி எதற்கு? – காரைத் திரும்ப ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!

946
0
SHARE
Ad

சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, கட்சியிடமே இன்று செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்.

sambath-jayaகாரை திரும்ப ஒப்படைத்தது குறித்து நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி, கழகத்தின் பிரசாரத்திற்காக இந்தக் காரை அம்மா என்னிடத்தில் ஒப்படைத்தார். பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட அந்தக் காரை பிரசாரத்தைத் தவிர வேறு எதற்கும் நான் பயன்படுத்தவில்லை. பிரசாரம் இல்லாத நாட்களில் எனது நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தேன்.”

nanjil_11073

#TamilSchoolmychoice

“இப்போது கடந்த 8 மாத காலமாக பிரசாரம் இல்லாத காரணத்தாலும், வீணாக அந்தக் காரை வைத்துக் கொண்டு இன்னோவா சம்பத் என்ற அவப் பெயரையும் சுமந்து கொண்டு எதற்காக இருக்க வேண்டும்? என்று தோன்றியதால், இன்று கட்சித் தலைமையிடம் காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.