31 வயது மலேசியரான அந்நபர் இன்று அதிகாலை 3.30 மணியளவில், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.
அச்சோதனையில் அவரிடம் கிட்டத்தட்ட 32,000 டாலர் (99,360 ரிங்கிட்) மதிப்புள்ள ஹெராயின் வகை போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரைக் கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த போதைப் பொருளையும், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு இலாகா தெரிவித்துள்ளது.
“15 கிராமுக்கு அதிகமான போதைப் பொருள் வைத்திருந்தால், மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் சட்டப்படி, மரண தண்டனை வழங்கப்படுகின்றது” என்று சிங்கப்பூர் குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது.
அந்நபர் கடத்திய போதைப் பொருள் 1,250 உறிஞ்சலுக்குச் சமமானது. அதாவது ஒருவாரத்தில் அதனை வைத்து 180 பேரை போதைக்கு அடிமையாக்க முடியும் என்றும் குடிநுழைவு இலாகா தெரிவித்துள்ளது.