சென்னை – அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியையும் அவரே வகிக்க வேண்டும் என்று கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நடப்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கினர்.
தனக்கு ஆதரவாக மத்திய அரசு இருக்கும் என்று நம்பியிருந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் பதவியைத் தக்க வைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
எனினும், அம்முயற்சிகள் தோல்வியடைந்து, ஓபிஎஸ் தனது ராஜினிமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்ததற்கான அமைச்சர்களின் ஆதரவுக் கடிதம் தற்போது தயாராகி வருவதாகவும், விரைவில் தமிழக ஆளுநரிடம் அது ஒப்படைக்கப்படும் என்றும் கார்டன் வட்டாரம் கூறுகின்றது.
வரும் ஜனவரி 12-ம் தேதிக்குள் சசிகலா முதல்வராக அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.