Home Featured நாடு “பிரதமர் என்ற முறையில், நஜிப் அரசு விமானத்தைப் பயன்படுத்தலாம்”

“பிரதமர் என்ற முறையில், நஜிப் அரசு விமானத்தைப் பயன்படுத்தலாம்”

701
0
SHARE
Ad

najib

கோலாலம்பூர் – ஆண்டு இறுதியில் தனது குடும்பத்தினரோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் சுற்றுப் பயணம் சென்றதும், அந்த சுற்றுப் பயணத்தின்போது அரசாங்கத்திற்கு சொந்தமான விமானத்தைப் பயன்படுத்தியதும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ319 விமானத்தை அவர் பயன்படுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் அவருக்கு உரிமை இருக்கிறது என உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் பிரதமரைத் தற்காத்துள்ளார். மலேசியாகினி இணையத் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆனால் பிரதமர் தனது சொந்த விடுமுறை சுற்றுப் பயணத்திற்கு அரசு விமானத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய அரசியல் சர்ச்சைகள் ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். ஆனால் அந்த விமானத்தைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது” என்றும் நூர் ஜஸ்லான் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி அதிகாலையில் அந்த அரசு விமானத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் சென்றடைந்த நஜிப்புடன் அவரது குடும்பத்தினரும் இணைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள்  பிரிஸ்பேன் சென்றுள்ளனர். அங்கு 4 நாட்கள் தங்கியிருக்கின்றனர்.

அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் மற்ற நகர்களுக்கும் அவர்கள் சென்றுள்ளனர். அந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை நஜிப்பின் மகன் முகமட் நோர்ஹஷ்மான் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

பிரதமர் தனது குடும்பத்தினரோடு தனிப்பட்ட சுற்றுப் பயணம் செல்லும்போது அரசு விமானத்தைப் பயன்படுத்தலாமா என்பது போன்ற கேள்விகளும் நட்பு ஊடகங்களில் எழுப்பப்பட்டன.

நாட்டின் பொருளாதார சூழலில் ஆடம்பரமான வெளிநாட்டு விடுமுறை பிரதமர் குடும்பத்தினருக்கு தேவையா என்பது போன்ற சர்ச்சைகளும் இணைய ஊடகங்களில் எழுந்துள்ளன.