Home உலகம் இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமனம்

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமனம்

1081
0
SHARE
Ad

mohanperisjஇலங்கை, ஜனவரி 15 – இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக    மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபட்சே முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியதையடுத்து முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகாவை பதவி நீக்கம் செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.