
கடைசி நேர பேச்சு வார்த்தைக்கு பின் அரை கோடி ரூபாய் திரைக்கதை மன்னனுக்கு தந்ததாக தகவல்.பாக்யராஜ் நடித்த படங்களில் எல்லா காலங்களிலும் நினைவு கூரப்படும் சிறந்த படமான முந்தானை முடிச்சு படத்தை மறுபடியும் படமாக்குவது கடினம் என்று நினைத்தார்களோ என்னவோ, இதன் இரண்டாம் பாகத்தை தற்போது ‘மாப்பிள்ளை வினாயகர்’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள்.
விஜய் டிவி யில் காமெடி நிகழ்ச்சி செய்து வந்த ஜீவா இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். குருவி படத்தில் த்ரிஷாவின் பையை ஆட்டையைப் போட்டு அடி வாங்குவாரே… அவர்தான் ஜீவா.
பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கம். காரைக்குடியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா போலில்லாமல் இந்த இரண்டாம் பாகம் முயற்சி பாக்யராஜின் அறிதலுடன் நடக்கிறது.
ஜீவாவின் பெற்றோர்களாக முந்தானை முடிச்சு ஜோடியான பாக்யராஜும், ஊர்வசியும் நடிக்கிறார்கள். முந்தானை முடிச்சு படத்தில் பிரபலமான முருங்கைக்காய் நகைச்சுவை இந்தப் படத்திலும் தொடர்கிறதா என்பது படம் வெளிவந்தவுடன்தான் தெரியும்!