Home Slider மலேசிய இந்தியர்களின் இதய உணர்வுகளை வெளிகொணரும் நிகழ்ச்சி ‘நிஜம்’ ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறுகிறது

மலேசிய இந்தியர்களின் இதய உணர்வுகளை வெளிகொணரும் நிகழ்ச்சி ‘நிஜம்’ ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறுகிறது

958
0
SHARE
Ad

Slider-Andy-Sengiahகோலாலம்பூர்,ஜன.16- முதன் முதலாக மலேசிய இந்தியர்கள் இதய உணர்வுகளை வெளிகொணரும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் ‘நிஜம்’ என்ற நிகழ்ச்சி ஒளியேறவுள்ளது.

இந்தத் தொடர் குறித்து தயாரிப்பாளர் எண்டி செங்கையா ( படத்தில் உள்ளவர்) கூறுகையில், பொதுமக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசும் வகையில் ‘நிஜம்’ என்ற தொடரை உருவாக்கியுள்ளோம். வரும் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஆஸ்ட்ரோ வானவில்லில் இரவு 9 மணிக்கு ஒளியேறும். தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளியேறவுள்ள இந்நிகழ்வில் இந்தியர்கள் எதிர்நோக்கும் குறை நிறைகள் குறித்து பேசப்படும்.

குறிப்பாக தற்போது இந்தியர்கள் எதிர்நோக்கும் பிறப்புப்பத்திரம், அடையாள அட்டை குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை முதலில் ஒளிபரப்புவோம். அவர்களின் கூறும் குறை நிறைகளை  எவ்வாறு களைவது அல்லது அவர்கள் ஏன் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி கொள்கிறார்கள் என்று பொதுமக்களில் சிலரிடம் கேட்கவுள்ளோம்.

#TamilSchoolmychoice

நம்மவர்கள் பொதுவாக தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். மாறாக சற்று அறிவார்ந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ‘நிஜம்’ தொடர் வெளிவர இருப்பதாகவும் ஆண்டி தெரிவித்தார்.

நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு பல நேரங்களில் நாம் செய்யும் தவறுகளே காரணமாகி விடுகிறது. இதனை களைந்தாலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறும் இவர் ‘நிஜம்’ தொடர்  கண்டிப்பாக அனைவரும் காண வேண்டும் என்று அன்பு வேண்டுகோளும் விடுத்தார்.