Home Featured இந்தியா அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

750
0
SHARE
Ad

aiadmk-flagபுதுடில்லி – தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என அதிகரித்து வரும் போராட்டங்கள் குறித்துப் பேசவும், ஜல்லிக் கட்டு மீண்டும் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலை 10.00 மணி முதல் நரேந்திர மோடியைச் சந்திக்க காத்திருக்கின்றனர்.

இருப்பினும் அவர்களைச் சந்திக்க நரேந்திர மோடி இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு பிரதமர் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜல்லிக்கட்டுவை மீண்டும் நடத்துவதற்கு சிறப்பு சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice