Home Featured நாடு அட்னான் மறைவுக்கு சுப்ரா அனுதாபம்!

அட்னான் மறைவுக்கு சுப்ரா அனுதாபம்!

669
0
SHARE
Ad

Dr S. Subramaniam

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை காலமான சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ டத்தோ அமார் ஹாஜி அட்னான் சாத்திமின் திடீர் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

“சரவாக் மாநிலத்தைத் தனது சீரிய தலைமைத்துவத்துடனும் மிதவாதத்தன்மையுடனும் வழிநடத்தி வந்த அட்னான் அவர்களின் மறைவானது ஈடு செய்ய முடியாததாகும். சரவாக் மாநிலத்தில் சுகாதாரச் சேவையை மேம்படுத்தும் பொருட்டு பல நிலைகளில், பல முறைகளில் அவருடன் கலந்துரையாடியதுண்டு. அவ்வகையில், அன்னாரைப் பிரிந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சரவாக் மாநில மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா நேற்று விடுத்த அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.