கோலாலம்பூர் – தமிழர்களின் வாய்மொழி இலக்கியமாக சிறப்புப் பெற்றவை நாட்டுப்புறப் பாடல்கள். ஏட்டிலும் எழுத்திலும் எழுதிவைக்காத காரணத்தினால், இன்று நாட்டுப்புறப் பாடல்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற நமது தமிழர் மண்ணிசையாகிய நாட்டுப்புறப் பாடல்களை இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், கெடா டத்தாரான் கூலிமில் நடைபெறும் பொங்கு தமிழ் விழாவில் பாடி சிறப்பிக்கவுள்ளனர் தமிழகம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணிப் பாடகர்கள்.
அவர்களில், நாட்டுப்புற பாடல்கள் என்றாலே ரசிகர்களின் மனதில் உதயமாகும் வேல்முருகன், பிரபல பலம்பெரும் நடிகரான என்.எஸ் கிருஸ்ணானின் வம்சாவளியான பாடகி ரம்யா,சூப்பர் சிங்கர் திவாகர் மற்றும் அஸ்ட்ரோ சூப்பர்ஸ்டார் பாடல் போட்டியின் வெற்றியாளர்களான குமரேஷ் மற்றும் நாராயினி ஆகியோர் அடங்குவர்.
இவ்விழாவை டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்கள் சுரேஷ் ,அகிலா, விழுதுகள் சுரேஷ் மற்றும் ஆதித்யா தொலைக்காட்சி அறிவிப்பாளர் அகழ்யா தொகுத்து வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாடகர் வேல்முருகன் மற்றும் பாடகி ரம்யா அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியை இங்கேயுள்ள இணைப்பில் காணலாம்:-