Home Featured நாடு மாற்றுத் திறனாளிகளுடன் மாமன்ற பொங்கல் விழா 2017

மாற்றுத் திறனாளிகளுடன் மாமன்ற பொங்கல் விழா 2017

807
0
SHARE
Ad

MHDMகோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றமும் மலேசிய டாமாய் மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து ஏழாம் ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாடவிருக்கின்றனர்.

இவ்வாண்டு இரு இயக்கங்களும் பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆதரவோடு மீண்டுமொருமுறை இணைந்து நடத்தும் 7-வது பொங்கல் விழா, நாளை 14 ஜனவரி 2017, சனிக்கிழமையன்று மாலை மணி 3.00 முதல் இரவு மணி 9.00 வரை, பெஎஸ்எப்4, பெட்டாலிங் ஜெயாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.

நமது பாரம்பரிய மரபுப் படி மாற்றுத் திறனாளிகள் பங்குப்பெறும் வகையில் பொங்கல் பொங்குதல், வழிபாடு பிரார்த்தனை செய்தல், உறுமி மேளம் இசைக் கச்சேரி, தமிழர்கள் பண்பாட்டு விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

மலேசிய திருக்கோவில்களில் மாற்றுத் திறனாளிகளும் சென்று வழிபடும் பொருட்டு அவர்களின் சக்கர வண்டி செல்வதற்கான வழி தடங்களை அமைத்து கொடுத்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் இப்பொங்கல் விழாவை அத்திருத்தலத்தில் நடைபெற செய்து நற்சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்படவிருக்கின்றனர்.

இப்பொங்கல் விழாவில் வட்டார பொதுமக்கள், நாட்டிலுள்ள பிற சமய மொழி அரசு சார்பற்ற இயக்க பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், மாற்றுத் திறனாளி சங்க உறுப்பினர்கள், மாமன்ற குடும்ப உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு மாமன்ற தேசிய கௌரவப் பொதுச் செயலாளர் ரிஷிகுமார் வடிவேலு இரு இயக்கங்களின் சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இது குறித்த தகவல்களுக்கு 012-2016115 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளமாறு மாமன்ற தேசியத்தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தெரிவித்துள்ளார்.