கோலாலம்பூர் – மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் 37-வது தேசியப் பேராளர் மாநாடு 2019 எதிர்வரும் 29 ஜூன் 2019, சனிக்கிழமை காலை மணி 8.00 முதல் மாலை மணி 6.00 மணி வரை ஜாலான் ஸ்கோட், பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் ஸ்ரீ கந்தசாமி ஆலய கலாமண்டபத்தில் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் உயர்திரு. இராதாகிருஷ்ணன் அழகுமலை தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200 பேராளர்கள் அருள்நிலையங்களை பிரதிநிதித்துப் பங்கேற்க உள்ளனர்.
அன்று காலை மணி 8.30-க்கு மேல் மாநாடு தொடக்க விழாவில் விருதளிப்பு விழா நடைபெறும். மாமன்றத்திற்கும், இந்து தர்மத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து ஐவருக்குத் ‘தர்ம மாமணி’, “தர்ம பூஷணி” மற்றும் தேசிய விருதுகளை மாமன்றம் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கவுள்ளது.
வட்டாரப் பொதுமக்கள் நாட்டிலுள்ள பிற சமய மொழி அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் தொடக்க விழாவில் 29 ஜூன் காலை மணி 8.30 மணியளவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
பேராளர் மாநாடு குறித்த மேல் விவரங்களுக்கும் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கும் மாமன்றத் தேசியக் கௌரவப் பொதுச் செயலாளர் திரு ரிஷிகுமார் வடிவேலு அவர்களைக் கைபேசி எண்: 012 – 2016115 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளவும்.
மின்னஞ்சல் : rishi.mhdm@gmail.com