Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ பொங்கு தமிழ்: பாகான் டத்தோவில் ரம்யா, திவாகர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள்!

அஸ்ட்ரோ பொங்கு தமிழ்: பாகான் டத்தோவில் ரம்யா, திவாகர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள்!

845
0
SHARE
Ad

Ponggu tamilகோலாலம்பூர் – அஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா இன்று ஜனவரி 17-ம் தேதி, பாகான் டத்தோவில், ஹூத்தான் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இரவு 8 மணியளவில், பாடகி ரம்யா,சூப்பர் சிங்கர் திவாகர் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும் மதுரை முத்து கலந்து கொள்ளும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

தமிழர்களின் வாய்மொழி இலக்கியமாக சிறப்புப் பெற்றவை நாட்டுப்புறப் பாடல்கள். ஏட்டிலும் எழுத்திலும் எழுதிவைக்காத காரணத்தினால், இன்று நாட்டுப்புறப் பாடல்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. எனவே அப்பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் மற்றும் வெளியூர் பாடகர்கள் அவற்றைப் பாடி மக்களை மகிழ்விக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice