Home Featured நாடு 4 ரிங்கிட்டிற்கு வாங்கி 24.3 மில்லியன் ஜாக்பாட் வென்ற சிங்கப்பூர் பெண்!

4 ரிங்கிட்டிற்கு வாங்கி 24.3 மில்லியன் ஜாக்பாட் வென்ற சிங்கப்பூர் பெண்!

830
0
SHARE
Ad

sport-totoகோலாலம்பூர் – மலேசியாவில் சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்டில் இரண்டு எண்களை 4 ரிங்கிட்டிற்கு வாங்கிய சிங்கப்பூர் பெண்ணுக்கு 24.3 மில்லியன் ரிங்கிட் பரிசு கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி 4-ம் தேதி, 50 வயதான அப்பெண் வாங்கிய எண்ணிற்கு 24.3 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை கிடைத்தது.

பரிசு விழுந்த 1 வாரத்திற்குப் பின் கோலாலம்பூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் டோட்டோ தலைமையகத்தில் அப்பெண் தனது பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டதாக ஸ்போர்ஸ் டோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வழக்கமாக ஜோகூரில் இருக்கும் தனது உறவினரிடம் காசு கொடுத்து ஜாக்பாட் எண் எடுக்கச் சொல்வதாகவும், இம்முறையும் அது போல் காசு கொடுத்து ஜாக்பாட் எண் எடுக்கச் சொன்னதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் இப்பரிசுத்தொகையை தனது குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப் போவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.