Home Featured நாடு சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி காலமானார்!

சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி காலமானார்!

727
0
SHARE
Ad

kamarol-air-tawauகிள்ளான் – சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி அப்துல் ஹாலிம் (வயது 57) இன்று செவ்வாய்க்கிழமை காலை கம்போங் சுங்கை ஆயர் தாவாரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.

சபா பெர்னாம் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சுங்கை ஆயர் தாவார் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஸ் வேட்பாளர் வாஹிட் ராயிசை வீழ்த்தி, 1,416 வாக்குகள் பெரும்பான்மையில் அம்னோ வேட்பாளரான கமரோல் ஜாக்கி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், சுங்கை ஆயர் தாவார் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice