Home Featured நாடு பினாங்கில் வானில் தோன்றிய மர்மப் பொருட்கள் பறக்கும் தட்டுகளா?

பினாங்கில் வானில் தோன்றிய மர்மப் பொருட்கள் பறக்கும் தட்டுகளா?

758
0
SHARE
Ad

Komtarஜார்ஜ் டவுன் – பினாங்கு மாநிலம் ஜார்ஜ் டவுன் கொம்டார் அருகே பறக்கும் மர்மப்பொருள் ஒன்று காணப்பட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் செய்தி ஒன்று பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது.

வாங் சூன் யூ என்பவர் பதிவு செய்துள்ள அக்காணொளியில் வானில் இரண்டு வெள்ளை நிறப் பொருட்கள் பறப்பது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

எனினும், அவை பறக்கும்தட்டுக்களா (UFO) என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

“பறக்கும் பொருள் ஒன்று பினாங்கு வான்பகுதியில் தோன்றியது, என்னை நம்புங்கள்” என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள வாங், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அக்காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது அக்காணொளி நட்பு ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

https://www.youtube.com/watch?time_continue=13&v=EWcj3GVP1_I