Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ தாரா எச்.டியில் புத்தம் புதிய மூன்று பாலிவுட் நிகழ்ச்சிகள்!

அஸ்ட்ரோ தாரா எச்.டியில் புத்தம் புதிய மூன்று பாலிவுட் நிகழ்ச்சிகள்!

788
0
SHARE
Ad

Tara 1கோலாலம்பூர் – பாலிவுட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஜனவரி 29-ம் தேதி, அஸ்ட்ரோ தாரா எச்டி, ‘பாலிவுட் எக்ஸ்பிரஸ்’, ‘சென்சேஷன் எஸ்.ஆர்.கே’ மற்றும் ‘பாலி ஸ்டேஜ்’ என்ற மூன்று புத்தம் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கின்றது.

இதற்கான அறிமுக விழா நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “நாங்கள் எப்பொழுதும் நேயர்களுக்கு தரமான மற்றும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கவே முயற்சிகின்றோம். பாலிவுட் ரசிகர்களை கவரும் வகையில் ஹிந்தி பாடல்கள் மற்றும் பாலிவுட் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகின்றன. இன்று அறிமுகப்படுத்தப்படும் இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பாலிவுட் ரசிகர்களை பெருமளவில் கவரும் என்பதில் ஐயமில்லை’’, என்றார்.

#TamilSchoolmychoice

“பாலிவுட் எக்ஸ்பிரஸ்” – (ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை, மாலை 7.00 மணிக்கு)

இது பாலிவுட்டை அடிப்படையாகக் கொண்ட  30 நிமிட நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல மலாய் கலைஞர்களான டத்தோ ஜலாலுடின் ஹாசன், சித்தி நொர்டினா, அசாட் ஜஸ்மின், நூபான், டேவி லியானா, பிர்மன், ஏபி யுஸ், மீரா லியான, நச்வா பி.ரம்லீ, ஏரா பாசீரா, அமீரா ரொஸ்லி, அமர் பனரின், ஷமில், எர்னீ, தெகார், பவ்சியா லத்தீவ் மற்றும் மார்சஷா மிலன் லண்டோ ஆகியோர் தங்களின் விருப்ப பாலிவுட் நாயகர்களை மனதில் கொண்டு பாடல்கள், நாடகங்கள் மற்றும் பாலிவுட் தகவல்கள் என அசத்தவுள்ளனர்.

Tara 2“பாலி ஸ்டேஜ்” – (ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை, மாலை 6.30 மணிக்கு)

எட்டு அத்தியாயங்களை கொண்ட இந்நிகழ்ச்சி பாலிவுட் இசை ரசிகர்களை  ஈர்க்கும் வகையில் ஹிந்தி பாடல்களை ஒளிபரப்பவுள்ளது. பிரபல பின்னனி பாடகர்களான அபிஜீத் பத்தாசார்யா, பலக் முச்சா மற்றும் அர்மான் மலிக்கின் இசை மழையில் மூழ்க ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த நிகழ்ச்சியாகும். இந்த 30-நிமிட நிகழ்ச்சியில் பாடல்கள் மட்டுமல்லாது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடகர்கள் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

“சென்சேஷன் எஸ். ஆர்.கே”- (ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை, மாலை 7.30 மணிக்கு)

சினிமா பின்னணியே இல்லாமல் பாலிவுட்டில் பிரவேசித்து புகழின் உச்சியையும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தையும் பிடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் வாழ்க்கைப் பயணத்தை பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்ட ஷாருக்கானின் பள்ளி, கல்லூரி ஞாபகங்கள், தியேட்டர் அனுபவம், கௌரியுடன் காதல் என பல சுவாரசியமான தகவல்களும் பகிர்ந்துக்கொள்ளப்படும்.