இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 20-ஆம் தேதியுடன் இந்தக் கருத்தரங்கம் நிறைவு பெறுகிறது.
இந்த கருத்தரங்கின் விவாத அரங்கங்களில் பங்கு கொண்டதோடு, அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மற்ற தலைவர்கள், பிரமுகர்களையும் டாக்டர் சுப்ரா சந்தித்தார்.
டாவோஸ் கருத்தரங்கிற்கு வருகை தந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை டாக்டர் சுப்ரா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் உலகப் பொருளாதார கருத்தரங்கத்திற்கு வருகை தந்த நோபல் பரிசு வெற்றியாளரும், வங்காளதேசத்தைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியருமான முகமட் யூனுசையும் சுப்ரா சந்தித்துப் பேசினார்.
கிராமின் வங்கி என்ற ஒரு வங்கித் திட்டத்தை வங்காளதேசத்தில் தொடங்கி, சிறுவணிகர்களையும், ஏழைப் பெண்மணிகளையும் கொண்ட, சிறு முதலீட்டு வணிகங்களைத் தொடக்கி அதனை ஒரு வெற்றிகரமான இயக்கமாக உருமாற்றிக் காட்டியவர் முகமட் யூனுஸ்.
உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் சுப்ரா இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்புகின்றார்.