Home இயக்கங்கள் 41ஆம் ஆண்டு பொதுக்கூட்டமும் இளஞ்செல்வனின் இலக்கிய விருதளிப்பும்

41ஆம் ஆண்டு பொதுக்கூட்டமும் இளஞ்செல்வனின் இலக்கிய விருதளிப்பும்

812
0
SHARE
Ad

murasu-nedumaranசுங்கைப்பட்டாணி, மார்ச்.21- எதிர்வரும் 23.3.2013 தேதி மாலை 4.01 மணி தொடக்கம் வள்ளலார் அரங்கம் மலேசிய சுத்த சன்மார்க்க சத்திய சங்க கட்டடத்தில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் 41ஆம் ஆண்டு பொதுக்கூட்டமும் இளஞ்செல்வனின் இலக்கிய விருதளிப்பும் என இரு அங்கங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது எண்.323, ஜாலான் தாமான் பண்டார் பாரு 4, தாமான் பண்டார் பாரு 0800, சுங்கைப்பட்டாணி, கெடா என்ற முகவரியில் நிகழவுள்ளது.

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் பெருமையுடன் வழங்கும் 2013ஆம் ஆண்டிற்கான இளஞ்செல்வன் இலக்கிய விருது மலேசியத் தமிழுலகில் தன்னிகரில்லா கவிஞராகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமகனார் முரசு நெடுமாறன் அவர்களுக்கு மிகப் பெருமிததுடன் வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice