Home Featured நாடு “காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு மகாதீர்...

“காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு மகாதீர் சவால்!

941
0
SHARE
Ad

mahathir

கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஸ் கட்சியின் இணைப்பு அவசியம் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மும்முனைப் போட்டிகளில் தேசிய முன்னணியையும், பாஸ் கட்சியையும் பல தொகுதிகளில் வெல்லும் என துன் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.

பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பாஸ் கட்சியைக் கூட்டணியில் இணைக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், பெர்சாத்துவின் மூத்த தலைவரான மகாதீர் “மும்முனைப் போட்டிகளுக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வலுவான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைக் கொண்டு பல இடங்களில் தேசிய முன்னணியையும், பாஸ் கட்சியையும் எங்களால் தோற்கடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சிங்கையிலிருந்து வெளிவரும் ஸ்ட்ரெயிட்ஸ் பத்திரிக்கையின் ஞாயிறு பதிப்பான சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் பல இடங்களில் தேசிய முன்னணி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.

“பாஸ் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிக்க வேண்டும் அல்லது பக்காத்தான் தவிர்த்த மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால், தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெறுவதற்கு அவர்களே வழிவகுத்தவர்களாக ஆகிவிடுவார்கள்” என்றும் மகாதீர் எச்சரித்துள்ளார்.

பாரிசான் ராயாட் – மக்கள் முன்னணி – என்ற பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என அறிவித்து டான்ஸ்ரீ மொகிதின் அந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றார். எனினும், இன்னும் பாஸ் தனது ஒப்புதலைத் தரவில்லை.

இந்நிலையில்தான் மகாதீர் காலம் கடந்து விட்டது என பாஸ் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.