சென்னை – வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாவதாக இருந்த சூர்யாவின் சிங்கம் 3, ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக மீண்டும் தள்ளிப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 3-ம் தேதி ‘சிங்கம் 3’ வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, தணிக்கை விவகாரம் ஆகியவற்றின் காரணமாக இரண்டு முறை தள்ளிப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.