கோத்தாகினபாலு – சபா கடலோரப் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உல்லாசப் படகு மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகின்றது.
படகைச் செலுத்திய மாலுமியும், பணியாளர் ஒருவரும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படகு மூழ்கியுள்ளதாக நம்பப்படும் பகுதியில் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
படகில் சீனாவைச் சேர்ந்த 28 பயணிகள் இருந்ததால், சீனாவின் கடற்படையும் அவர்களைத் தேடும் பணியில் நேரடியாக இணையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த சீனாவைச் சேர்ந்த 28 பயணிகளில் குழந்தைகளும் இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.