Home Featured நாடு சபா படகு விபத்து: 22 பேர் காப்பாற்றப்பட்டனர்! 3 பேர் மரணம்! 6 பேர் காணவில்லை!

சபா படகு விபத்து: 22 பேர் காப்பாற்றப்பட்டனர்! 3 பேர் மரணம்! 6 பேர் காணவில்லை!

910
0
SHARE
Ad

Sabah-islands

கோத்தாகினபாலு – சபா மாநிலக் கடல் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உல்லாசப் படகு, மூழ்கிய சம்பவத்தில், இதுவரையில் 22 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அறுவர் இதுவரை காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மரணமடைந்த மூவரின் அடையாளங்கள் முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னரே வெளியிடப்படும்.

இந்த உல்லாசப் படகில் பயணம் செய்த 31 பயணிகளில் மூவர் பணியாளர்கள். 28 பேர் சீனா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.