ஐதராபாத் – தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையான சமந்தாவுக்கும், நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவுக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நாகசைதன்யாவும், சமந்தாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், நேற்று இச்செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
அவர்களின் திருமண நிச்சயதார்த்தம், நாகர்ஜூனா, அமலா தம்பதியர், அவர்களது இளைய மகன் அகில், மருமகள் ஷ்ரேயா பூபால் மற்றும் சமந்தா பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.