Home Featured தமிழ் நாடு சசிகலா பிப்ரவரி 6-இல் முதல்வராகப் பதவியேற்கிறார்!

சசிகலா பிப்ரவரி 6-இல் முதல்வராகப் பதவியேற்கிறார்!

678
0
SHARE
Ad

sasikala-flower-jayalalithaaசென்னை – தமிழக அரசின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்த தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் தங்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் முக்கியக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் சசிகலா அடுத்த தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 6-ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராகப் பதவியேற்பார் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.