Home Featured நாடு பாலா, ஹென்ரி விவகாரம்: மஇகா மத்திய செயலவையில் விவாதிக்கப்படவில்லை!

பாலா, ஹென்ரி விவகாரம்: மஇகா மத்திய செயலவையில் விவாதிக்கப்படவில்லை!

854
0
SHARE
Ad

bala-henry-combo

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கும் அதே வேளையில், கட்சியில் மீண்டும் இணைவார்கள் என ஆரூடம் கூறப்பட்ட ஜோகூரின் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், மற்றும் பினாங்கு மாநிலத்தின் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் இருவரும் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பாலா-ஹென்ரி இரண்டு தரப்பினரும் மீண்டும் மஇகாவில் இணைய மாட்டோம் என்றோ, மத்திய செயலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தோம் என்றோ இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

அதே சமயம், நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் பாலா-ஹென்ரி இருவரும் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பாலா-ஹென்ரி இருவரும் மஇகாவில் இணைவது குறித்து தொடர்ந்து பின்னணியில் அவர்களுக்கும், மஇகா தலைமைத்துவத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னரே, அவர்கள் இருவரின் கட்சிப் பதவிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.