Home Featured தமிழ் நாடு அதிமுக அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி படையெடுப்பு!

அதிமுக அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி படையெடுப்பு!

860
0
SHARE
Ad

aiadmk-flag

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) சென்னைக்கு வராமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலதாமதம் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய அதிபரிடம் அதனை வலியுறுத்துவதற்காக, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், புதுடில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் புதுடில்லி சென்று இந்திய அதிபரைச் சந்தித்து, சசிகலாவுக்கான தங்களின் ஆதரவைப் புலப்படுத்துவதோடு, சசிகலாவை முதல்வராக நியமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னைக்கு வராமல் இருக்கும் ஆளுநர் குறித்து புகார் கூறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஏற்கனவே புதுடில்லி சென்று முகாமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.