Home Featured தமிழ் நாடு ஆளுநர் 5 மணிக்கு பன்னீர் செல்வத்தையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்கிறார்!

ஆளுநர் 5 மணிக்கு பன்னீர் செல்வத்தையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்கிறார்!

690
0
SHARE
Ad

sasikala-panner-சென்னை – இன்று வியாழக்கிழமை தமிழகமெங்கும் முருகனுக்கு தைப்பூசத் திருவிழா ‘வேல் வேல்’ என்ற முழக்கங்களுடன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அரசியல் காரணங்களுக்காக சென்னை, திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பல அரசியல் வெடிகள் ஆங்காங்கு வெடித்துக் கொண்டிருக்கின்றன.

இன்று பிற்பகலில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வம் பக்கம் வந்து சேர்ந்துள்ள நிலையில் தமிழக அரசியலின் அண்மைய நிலவரங்கள் பின்வருமாறு:

  • இன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரம்) நடப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
  • அதே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு சசிகலாவைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
  • மற்றொரு அதிமுக பிரமுகர் ஜே.சி.டி.பிரபாகரன் பன்னீர் செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.