சென்னை – திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் (இந்திய நேரம்) தமிழக ஆளுநரைச் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் அவர் விவாதித்தார்.
அடுத்த முதல்வரை நியமிக்கும் நடவடிக்கையில் சட்ட ரீதியாக, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரியுள்ளதாகவும் அவர் சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ஆளுநரிடம் வழங்கிய மனுவில் தமிழக அரசு முடங்கியுள்ளது என்றும் கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமாக செயல்படவும், முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் ஆளுநரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.