Home Featured தமிழ் நாடு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் பன்னீர் பக்கம் சாய்ந்தார்!

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் பன்னீர் பக்கம் சாய்ந்தார்!

928
0
SHARE
Ad

sathyabama-thirupur MP-admk

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.00 மணி நிலவரம்) அதிமுக சார்பிலான திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா (படம்) சற்று முன் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவருடைய அணியில் இணைவதாக அறிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாரையெல்லாம் ஒதுக்கி வைத்தாரோ அவர்களையெல்லாம் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா அழைத்துள்ளார் என்றும் சத்தியபாமா பன்னீர் செல்வம் இல்லத்தில் பேசும்போது குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

சத்தியபாமாவுடன் சேர்த்து இதுவரை பன்னீர் செல்வம் பக்கம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான மைத்ரேயன், மக்களவை உறுப்பினர்களான  சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா (திருப்பூர்) ஆகிய நால்வரும் தற்போது பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர்.

மேலும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிம் அன்சாரியும் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.