Home Featured தமிழ் நாடு பன்னீர் செல்வத்துக்கு சரத்குமார் ஆதரவு! சுப்ரமணியசாமி ஆளுநருடன் சந்திப்பு!

பன்னீர் செல்வத்துக்கு சரத்குமார் ஆதரவு! சுப்ரமணியசாமி ஆளுநருடன் சந்திப்பு!

915
0
SHARE
Ad

sarathkumar

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சற்று முன் பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமி சென்னையில் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கூவத்தூரில் உள்ள கோல்டன் பே உல்லாச விடுதிக்கு வந்த சசிகலா, அங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தனித் தனியே அழைத்து சசிகலா அவர்களின் பிரச்சனைகளையும் ஆதரவையும் கேட்டறிந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், சசிகலா தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவார் என்ற பரபரப்பு நிலவுவதால், ஆளுநர் மாளிகையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் தனது ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் மற்றொரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்த சசிகலா தயாராகி வருகிறார் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

அந்த முதலமைச்சர் வேட்பாளர் செங்கோட்டையனாக இருக்கலாம் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன.

இதற்கிடையில், சசிகலா சொத்து குவிப்பு வழக்கு மீதிலான தீர்ப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படாது என உச்ச நீதிமன்ற வழக்குப் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.