சென்னை – (பிப்ரவரி 13 – மலேசிய நேரம் இரவு 11.30 நிலவரம்) சசிகலா, பன்னீர் செல்வம் இடையிலான போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக, மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இன்றிரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் (மேலே படம்) இன்றிரவு பன்னீர் செல்வத்தின் இல்லம் வந்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.
அதே வேளையில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்துள்ளார்.
Comments