Home Featured தமிழ் நாடு “கருணாநிதி வீடு என்று தெரியாது சார்” – பிடிபட்ட மர்ம நபர் வாக்குமூலம்!

“கருணாநிதி வீடு என்று தெரியாது சார்” – பிடிபட்ட மர்ம நபர் வாக்குமூலம்!

742
0
SHARE
Ad

karunanidhi -PTIசென்னை – திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில் நேற்று திங்கட்கிழமை போலித் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை துப்பாக்கி முனையில் மிரட்டினார்.

பணத்தை எடுத்துத் தருமாறு அவர் மிரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த பாதுகாவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மைலாப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அந்நபர் திருடுவதற்காக முதல் நாள் இரவே கருணாநிதி வீட்டில் நுழைந்து, நேற்று திங்கட்கிழமை மாலை வரை பதுங்கி இருந்தது தெரியவந்தது.

#TamilSchoolmychoice

மேலும், தான் திருட நுழைந்தது கருணாநிதியின் வீடு என்று தனக்குத் தெரியாது என்றும் அந்நபர் கூறியிருக்கிறார்.